பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்குவது எப்படி ?
எளிதாக நீக்கலாம். அதற்கான கீழ்க்காணும் செயல்முறை வழிகளைப் பின்பற்றவும்.
1. முதலில் பேஸ்புக் இணைய தளத்தில் உங்களுடைய, நீக்க விரும்பும் குறிப்பிட்ட அக்கவுண்ட்டில் நுழையவும். தொடர்ந்து வலது மூலையில் உள்ள Account -> Account Settings என்பதில் செல்லவும்.
2. இது Settings பக்கத்தினைத் திறக்கும்.
3. இங்கு "Deactivate Account" என்ற பிரிவில் கிடைக்கும் deactivate என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
4. அல்லது நேரடியாக http://www.facebook.com/deactivate.php என்ற லிங்க்கில் கிளிக் செய்து, அக்கவுண்ட்டினை நீக்கலாம்.
5. "Why are you deactivating:" என்ற பிரிவில், உங்களுக்கு விருப்பமான தேர்வினை ஏற்படுத்தி, அதில் பதில் அளிக்கலாம். இறுதியாக, Deactivate My Account" என்ற பட்டனை அழுத்தி, அக்கவுண்ட்டினை நீக்கலாம். 6. http://www.facebook.com/help/contact.php?show_form=delete_account என்ற இணைய தளம் சென்று, நிரந்தரமாக பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக