நோய் தீர்க்கும் கோயில்...!
கடவுளுக்கும், மருத்துவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது! இயேசு,நபிகள்,புத்தர்பிரான் பலநோய்களை குணப்படுத்தியதைப் பற்றி நாம் படித்திருக்கிறோம். டாக்டர்கள் கூட தம்மால் குணப்படுத்த முடியவில்லை எனில்,’கடவுள் வேண்டிக்கோங்க’ என்கிறார்கள்.!
நாம் பார்க்கப்போவது,வைத்தீஸ்வரன் கோவில் பற்றியது.நவகிரகங்களில் ஒருவரான அங்காரகனுக்கு தீராத தோல்நோய் ஏற்பட்டது.அவரை வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடும்படி ஒரு அசரீரி சொன்னது.அவரும் சித்தாமிர்த குளத்தில் நீராடியதும் அவரை வாட்டிய தோல்நோய் குணமானது.இந்தக்கோவிலில் சித்தர்கள் அமிர்தத்தைக் கடைந்து சிவனுக்கு வழிபட்டனர்.அதன் எச்சம் இன்னும் உள்ளதால் தீராத நோயும் இங்கு தீரும் என ஒரு நம்பிக்கை உள்ளது.
4448 நோய்கள் தீர, இங்கு திருச்சாந்து கொடுக்கப்படுகிறது.இது வேப்பிலை,அபிஷேக சந்தனம்,அபிஷேக விபூதி,புற்று மண் கலந்து தயாரிக்கப்படுகிறது.தோல்நோய் உள்ளவர்களுக்கு இங்கு புனுகு எண்ணெய் கொடுக்கப்படுகிறது.இதை தேய்த்து சித்தாமிர்த குளத்தில் குளத்தில் குளித்தால் நோய் பூரணமாக குணமாகிவிடும். வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ‘மருத்துவக்கடவுள்” என்ற பெயரும் உண்டு.
அங்காரகன் சன்னதில் வழிபடுபவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் ,அது உடனே தீரும் .இங்கு வழிபடும் நவகிரக சிலைகள் ஒரே நேர்கோட்டில் உள்ளது. ராமபிரான் இந்த கோவில் குளத்தில் முங்கி குளித்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது.
இக்கோவில் சிதம்பரத்திலிருந்து 22 கி,மீ தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 110 கி.மீ தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக